கோவை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் வேன் மீது பைக் மோதியதில் ஒருவர் பலி, 4பேர் படுகாயம்: விபத்து காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவு!

திருப்பூர்: கோவை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் வேன் மீது பைக் மோதியதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.


திருப்பூர்: கோவை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் வேன் மீது பைக் மோதியதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் மயில்ரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரும் இவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த ராஜூ, நிஷாந்த் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கோவை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கோயில் அருகே சென்றபோது அவர்களது இருசக்கர வாகனத்துக்கு முன் கோவை மாவட்டம் சூலூர் நோக்கி வேன் ஒன்று சென்றது. அப்பகுதியில் சாலையோரத்தில் இருந்த எரிவாயு நிரப்பும் மையத்துக்குச் செல்ல திடீரென வேன் திரும்பியது. அப்போது பின்னால் வேகமாகச் சென்ற மகேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் சென்ற இருசக்கர வாகனம் வேன்மீது மோதியது.



இருசக்கர வாகனம் மோதிய வேகத்தில் வேன் கவிழ்ந்தது.



விபத்தில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜூ, நிஷாந்த் மற்றும் வேனில் வந்த 2 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வெள்ளக்கோயில் போலீசார் ராஜூ, நிஷாந்த் இருவரையும் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மகேந்திரனின் உடல் மீட்கப்பட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து ஏற்பட்டபோது அருகில் இருந்த கட்டடத்தில் உள்ள சி.சி.டி.வியில் இருசக்கர வாகனம் வேகமாக வந்து ஆம்னி வேனின் மீது மோதியது மற்றும் மூன்று பேரும் தூக்கி வீசப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...