கோவை: ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பாகவத் முன்னாள் கவர்னர் சண்முகநாதன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக நாளை கோவை வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ்.தேசிய தலைவர் மோகன் பாகவத், நாளை (17ம் தேதி) மதியம் 12 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். நாளை மாலை 6 மணிக்கு ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில், முன்னாள் கவர்னர் சண்முகநாதன் எழுதிய, 'இந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை' எனும் நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார்.
விழாவில் நுாலின் பிரதியை சூலூர் ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை தலைவர் குப்புசாமி பெற்றுக் கொள்கிறார். மாரிமுத்து தலைமை தாங்குகிறார். திருப்பூர் பேராசிரியர் ஞானபூபதி, மதுரை பேராசிரியர் சந்திரன் ஆகியோர் நூலை அறிமுகம் செய்ய உள்ளனர். நுாலாசிரியர் சண்முகநாதன் ஏற்புரை வழங்குகிறார். விஜயா பதிப்பகம் உரிமையாளர் வேலாயுதம் நன்றி கூறுகிறார். வரும் 19-ம் தேதி வரை கோவையில் தங்கும் மோகன் பாகவத் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.