சேலம் கருமத்தம்பட்டி அருகே ஓடும் கார் தீயில் எரிந்து நாசம்: 5 பேர் உயிர் தப்பினர்!

கோவை: சேலம் கருமத்தம்பட்டி அருகே இன்று அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கார் முழுமையாக எரிந்து நாசமடைந்த நிலையில் காரில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கோவை: சேலம் கருமத்தம்பட்டி அருகே இன்று அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கார் முழுமையாக எரிந்து நாசமடைந்த நிலையில் காரில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சேலம் - கொச்சின் நெடுஞ்சாலையில் கருமத்தம்பட்டி அருகே இன்று அதிகாலை 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் பின்புறத்தில் புகை வந்தது.



இதைத்தொடர்ந்து கார் முழுவதும் தீ பற்றியது. இதனால் காருக்குள் இருந்தவர்கள் அலறி அடித்தபடி காரிலிருந்து வெளியே குதித்து ஓடத் தொடங்கினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் உடனடியாக கருமத்தம்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.



அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் பயணம் செய்த ஐந்து பேரிடம் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...