தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொள்ளாச்சி வருகையை முன்னிட்டு 15 ஏக்கரில் பிரம்மாண்ட அண்ணா அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்!

பொள்ளாச்சி: தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொள்ளாச்சி வருவதை முன்னிட்டு 15 ஏக்கரில் பிரம்மாண்ட அண்ணா அரங்கம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.



பொள்ளாச்சி: தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொள்ளாச்சி வருவதை முன்னிட்டு 15 ஏக்கரில் பிரம்மாண்ட அண்ணா அரங்கம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' எனும் தலைப்பில் பொதுமக்களிடம் 100 நாட்களில் தீர்வு என்று மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்று வருகிறார். அதனடிப்படையில் கோவை கிழக்கு மற்றும் கோவை தெற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட பொள்ளாச்சி பகுதிக்கு வரும் 20-ந் தேதி வருகிறார்.



இதையொட்டி பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் தி.மு.க வினர் 15 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்க, தமிழ் முறைப்படி கால்கோள் அமைக்கும் பணியை கோவை மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.



இதுகுறித்து தென்றல் செல்வராஜ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' எனும் தலைப்பில் பொதுமக்களிடம் மனு பெற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 20ஆம் தேதி பொள்ளாச்சிக்கு வந்து பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்கள் பெற ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையானஅடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...