லாபம் தரும் பணிகளை மட்டுமே செய்யும் அமைச்சர் வேலுமணி, மக்கள் பணிகளை செய்வதில்லை: தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. காட்டம்!

கோவை: லாபம் தரும் பணிகளை மட்டுமே செய்யும் வேலுமணி, மக்கள் பணிகளை செய்வதில்லை என்று தி.மு.க.நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. காட்டமாகக் கூறினார்.



கோவை: லாபம் தரும் பணிகளை மட்டுமே செய்யும் அமைச்சர் வேலுமணி, மக்கள் பணிகளை செய்வதில்லை, என்று தி.மு.க.நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார். 



கோவை மாநகராட்சிப் பகுதியில் நடைபெறும் ஊழல் முறைகேட்டைக் கண்டித்து சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில், மாநகர் கிழக்கு மாவட்டம் பீளமேடு பகுதி தி.மு.க. சார்பில், இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பீளமேடு பகுதி தி.மு.க. பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், 38-வது வார்டு வட்ட தி.மு.க. செயலாளர்கள் மாடசாமி, பூவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 



இதில், பெண்கள் உள்பட 3000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், பாதாள சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடி சாலைகள் அமைக்க வேண்டும், ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணிகளை முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாககளை ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில், பேசிய நா.கார்த்திக் எம்.எல்.ஏ பேசியதாவது: "மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்தக்கூட காவல்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். கோவையில் நடைபெறும் அவலங்களை சட்டமன்றத்தில் பேசவும் அனுமதி மறுக்கின்றனர். மக்கள் மன்றத்தில் நேரடியாக விவாதிக்க தான் தயாராக இருக்கிறேன், நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?"



மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில், நன்றாக இருக்கும் பகுதிகளில் பணிகளைச் செய்வதாக முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். லாபம் தரும் பணிகளை மட்டும் செய்யும் அமைச்சர் வேலுமணி, மக்கள் பணிகளை செய்வதில்லை. இதனால், சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக கோவை மாறியுள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கொள்ளைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. அனைத்திலும் ஊழல் நிறைந்துவிட்டது, என்று நா கார்த்திக் எம் எல் ஏ கண்டனம் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து, 3 ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தி.மு.க. சொத்து பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...