விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்... திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கனிமொழி தேர்தல் பரப்புரை!

திருப்பூர்: `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தலைப்பில் தி.மு.க. மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2 தினங்களாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் .


திருப்பூர்: `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தலைப்பில் தி.மு.க. மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2 தினங்களாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

தி.மு.க. மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2 தினங்களாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.



`விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் தெற்கு தொகுதியில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.



இதையடுத்து தியாகி திருப்பூர் குமரன் நினைவிடம் சென்று குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கனிமொழி பேசியதாவது:-

தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் அவசரகதியில் மினி கிளினிக்குகள் ஏன் தொடங்கப்பட்டன ?எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.விடம் தமிழ்நாட்டை, தன் கட்சியை, தன் மொழியை, சுயமரியாதையை, தமிழர்களின் அடையாளத்தை அடகுவைத்திருக்கிறார்.

அரசு பணத்தில் செய்த சாதனைகளை அ.தி.மு.க. சாதனையாகச் சொல்லி ஆயிரம் கோடியில் அரசின் சார்பில் விளம்பரம் செய்து முதல்வர் மட்டுமே வெற்றி நடை போட்டு வருகிறார். ஆனால், தமிழ்நாடு வெற்றி நடைபோடவில்லை. ரேஷன் கடைகள், நியாய விலைக்கடைகளாக நடக்க வேண்டும். ஆனால், அங்கே நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியாக அமைய இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...