கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகளை நகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாதிரி சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்களில் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம் வார்டு எண்.77க்குட்பட்ட செல்வபுரம் வடக்கு ஹவுசிங்பூனிட் பகுதியில் நடைபெற்றுவரும் தார்ச்சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, தெற்கு மண்டலம் வார்டு எண்.92-க்குட்பட்ட கிருஷ்ணசாமி நகரில் பழுதான சாலைகளை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதை ஆணையாளா்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக கோயம்புத்தூர் மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் திவான் பகதூர் சாலையில் சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல் கெளலிபிரவுன் ரோடு வரை சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் மாதிரி சாலை அமைக்கும் பணிகள், மின்சார புதைவடம், கேபிள்கள், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், தொலைத்தொடர்பு கேபிள், மழைநீர் வடிகால் மற்றும் இருபுறமும் பாதசாரிகள், நடைபாதைகள், அலங்கார தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள், ஒளிரும் விளம்பரப் பலகைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்றுவருவதை பார்வையிட்டு ஆணையாளர் ஆய்வு செய்தார்.
மீதமுள்ள முடிக்கவேண்டிய பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் ஞானவேல், உதவிப் பொறியாளர் கமலக்கண்ணன், இளம் பொறியாளர் கனகராஜ், இளம்பொறியாளா்(பொ) கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.