கோவை மாநகராட்சி வளர்ச்சிப்பணிகளை நகராட்சி ஆணையாளர் ஆய்வு: மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவு!

கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகளை நகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகளை நகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ பாதாள சாக்கடை அமைக்கும்‌ பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்களில்‌ பணிகள்‌ முடிவடைந்த பகுதிகளில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது. அதனைத்‌ தொடர்ந்து தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.77க்குட்பட்ட செல்வபுரம்‌ வடக்கு ஹவுசிங்பூனிட்‌ பகுதியில்‌ நடைபெற்றுவரும்‌ தார்ச்சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ நேரில்‌ ஆய்வு மேற்கொண்டார்.‌



அதைத்தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.92-க்குட்பட்ட கிருஷ்ணசாமி நகரில்‌ பழுதான சாலைகளை சரிசெய்யும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை ஆணையாளா்‌பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.24.36 கோடி மதிப்பீட்டில்‌ மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ திவான்‌ பகதூர்‌ சாலையில்‌ சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல்‌ கெளலிபிரவுன்‌ ரோடு வரை சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌, மின்சார புதைவடம்‌, கேபிள்கள்‌, குடிநீர் குழாய்‌ பதிக்கும்‌ பணிகள்‌, தொலைத்தொடர்பு கேபிள்‌, மழைநீர்‌ வடிகால்‌ மற்றும் இருபுறமும்‌ பாதசாரிகள்,‌ நடைபாதைகள்‌, அலங்கார தெருவிளக்குகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌, ஒளிரும்‌ விளம்பரப் பலகைகள்‌ அமைப்பது உள்ளிட்ட பணிகள் முழுவீச்சுடன்‌ நடைபெற்றுவருவதை பார்வையிட்டு ஆணையாளர் ஆய்வு செய்தார்.

மீதமுள்ள முடிக்கவேண்டிய பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, உதவிப்‌ பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌, இளம்‌ பொறியாளர்‌ கனகராஜ்‌, இளம்பொறியாளா்‌(பொ) கணேசன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...