கோவையில், தோழியுடன் பேசிக்கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து: உள்ளூர் ரவுடி உள்பட 2 பேருக்கு வலை!

கோவை: கோவை பகுதியில் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபருக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது, கத்தியால் குத்திய இந்து முன்னணியினர் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை பகுதியில் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபருக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது, கத்தியால் குத்திய இந்து முன்னணியினர் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை உக்கடம் கோட்டைமேடு எஸ்.எஸ்.கோவில் வீதி எஸ்.டி.பி.ஐ. 82-வது கிளை தலைவராக இருப்பவர் முகமது முபாரக் மகன் அகில் அகமது (வயது 27). இவர் நேற்று ராமநாதபுரம் பகுதியில் தன்வந்திரி கோயில் அருகே தன்னுடைய தோழி சாருலதா என்ற பெண்ணுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சஞ்சய் என்கிற சச்சின் ஆகியோர் அகில் அகமதுவைப் பார்த்து `என்னடா லவ் ஜிகாத் செய்கிறாயா?' என்று கூறி தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தினர். இரும்புக் கம்பியால் தாக்கியபிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ரத்தக் காயத்துடன் அகில் அகமது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவல் அறிந்ததும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த இப்ராஹிம் மற்றும் அதன் உறுப்பினர்கள் அரசு மருத்துவமனையில் கூடினர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து குற்றவாளி கார்த்திக் மற்றும் சச்சினை தேடி வருகின்றனர். கார்த்திக் உள்ளூர் ரவுடி என்பதும் இவர்மீது ராமநாதபுரம் காவல்நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...