பொள்ளாச்சி: ஏழைகளின் வாழ்வாதாரம் உயர கடந்த பத்தாண்டில் பன்னிரண்டரை லட்சம் பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கொள்ளுப்பாளையம், நாட்டுக்கல்பாளையம், கொல்லபட்டி, சி.மலையாண்டிபட்டிணம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் மூன்றரை கோடி செலவில் 1,110 ஏழைக் குடும்பங்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. கொல்லப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.36 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கால்நடை பராமரிப்பத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு வெள்ளாடுகள் வழங்கியதுடன் நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் வெள்ளாடுகளை பராமரிப்புக்காக ரூ.2 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
`தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தாண்டு மட்டும் ஒன்றரை லட்சம் பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் 12 லட்சத்து 75 ஆயிரம் வெள்ளாடுகள், ஒன்றரை லட்சம் பேருக்கு கறவை மாடுகள், மூன்றரை லட்சம் பேருக்கு நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பூர் மாவட்டத்தில் வரும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு தினங்கள் திருப்பூர், வடக்கு, தெற்கு, காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.