சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்ட 80 அடி உயர மூங்கில் கொடிமரம்: ஆனைமலை, மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா நாளை தொடக்கம்!

கோவை: ஆனைமலை, மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. இதற்காக சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 80 அடி உயர மூங்கில் கொடிமரம் எடுத்து வரப்பட்டது.


கோவை: ஆனைமலை, மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. இதற்காக சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 80 அடி உயர மூங்கில் கொடிமரம் எடுத்து வரப்பட்டது.

கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக இங்கு வந்துசெல்வார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையன்று குண்டம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான குண்டம் விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதற்காக நேற்று சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 80 அடி உயரமுள்ள மூங்கில் கொடிமரத்தை வெட்டி எடுத்துவர பக்தர்கள் சென்றனர்.



மூங்கில் கொடிமரத்தை வெட்டி எடுத்து வந்து சர்க்கார்பதி பகுதியில் உள்ள வனதேவதை கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.



அதன்பிறகு பல கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கொடிமரத்தை தோளில் சுமந்துவந்து மாசாணியம்மன் கோயில் அருகே உள்ள உப்பாற்றில் குளிப்பாட்டி சந்தனம், மலர் மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து, கோயில் வளாகத்தில் வைத்தனர்.

இந்த கொடிமரம் நாளை காலை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து செல்லப்பட்டு கோயில் கோபுரம் முன்பு நிலை நிறுத்தப்படும். கொடிமரம் எடுத்து வரும் பணியில் ஆனைமலை முன்னாள் பேரூராட்சித்தலைவரும், மாசாணியம்மன் நற்பணி மன்றத் தலைவருமானசாந்தலிங்ககுமார், கோயில் தலைமை முறைதாரர் மனோகரன், அருளாளி அருண் உள்பட பலர் இருந்தனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து, வரும் 24-ம் தேதி புதன்கிழமை நள்ளிரவு மயானபூஜையும், 25-ம் தேதி சக்தி கும்பஸ்தாபனமும், மகாபூஜையும் நடைபெறவுள்ளது. 26-ம் தேதி இரவு குண்டம் பூ வளர்த்தலும், 27-ம் தேதி காலை 8.30 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெறவுள்ளது. 28-ம் தேதி கொடி இறக்குதல், மார்ச் 1-ம் தேதி அபிஷேக பூஜையுடன் குண்டம் விழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில்நிர்வாகத்தினர், கோயில் முறைதாரர்கள், விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...