கொத்தடிமைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் மூன்றாண்டு சிறைத்தண்டனை: தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை!

நீலகிரி: கொத்தடிமைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் மூன்றாண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


நீலகிரி: கொத்தடிமைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் மூன்றாண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கு. சதீஷ்குமார் தலைமை தாங்கினார். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வாகனத்தில் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் வைப்பதன் மூலமாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

கொத்தடிமை தொழிலாளர்முறை ஒழிப்பு சட்டம் (1976)16,17 மற்றும் 18-ன் படி கொத்தடிமைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூறப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின்கீழ் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையர் சதீஷ்குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் எச்.வசந்தா, பா.கிருஷ்ணவேணி, சி.ரகுராம், நவீன் கிருஷ்ணா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...