கோவை: மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் உள்ள யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் யானை கல்யாணி மேளதாளத்துடன் அழைத்துச் செல்லப்பட்டது.

கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில், யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று துவங்குகிறது. அதில் பங்கேற்பதற்காக, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணிக்கு எடை மற்றும் உடல்நிலை பரிசோதனைகள் செய்யப்பட்டன. 4,610 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று காலை 5.30 மணி அளவில் யானைக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சர்வ அலங்காரத்துடன் மேளதாளங்கள் முழங்க லாரியில் ஏற்றப்பட்ட கல்யாணி யானை, நலவாழ்வு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே பேரூர் கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து சிலர் லாரியை முற்றுகையிட்டனர். போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர்.