கோவை கிழக்கு மண்டலத்தில் ரூ.12 கோடியில் தார்ச்சாலை புதுப்பிக்க பூமி பூஜை: அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்!

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ ரூ.12 கோடியே 93 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை புதுப்பிக்கும்‌ பணிகளுக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ ரூ.12 கோடியே 93 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை புதுப்பிக்கும்‌ பணிகளுக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணிதுவக்கி வைத்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ சிறப்பு சாலைகள்‌ திட்டத்தின்கீழ்‌ வார்டு எண்‌.32 மற்றும்‌ 37-க்குட்பட்ட பகுதியில்‌ ரூ.5 கோடி மதிப்பீட்டில்‌ கொடிசியா சாலை, அவினாசி சாலை முதல்‌ எஸ்‌.பெண்ட்‌ வரை மற்றும்‌ குமுதம்‌ நகர்‌ பிரதான சாலை மற்றும்‌ குறுக்கு சாலையை புதுப்பிக்கும்‌ பணி நடைபெற்றது.



விளாங்குறிச்சி சாலை மகேஷ்வரி நகர்‌ முதல்‌ மாநகராட்சி எல்லை வரை மற்றும்‌ சேரன்‌ மாநகர்‌ பிரதான சாலையில்‌ ரூ.5 கோடி மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை புதுப்பிக்கும்‌ பணி‌, வார்டு எண்‌.32 சேரன்‌ மாநகரில்‌ ரூ.2.93 கோடி மதிப்பீட்டில்‌ மலா அவென்யூ மற்றும்‌ சக்தி நகரில்‌ தார்ச்சாலை புதுப்பிக்கும்‌ பணி போன்ற பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. மொத்தம்‌ ரூ.12 கோடியே 93 லட்சம்‌ மதிப்பீட்டிலான இந்த தார்‌ச்சாலை புதுப்பிக்கும்‌ பணிகளுக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ ‌தலைமை தாங்கினார். கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்‌ அம்மன்‌ கே.அர்ச்சுணன்‌‌, வடக்கு சட்டமன்ற உறுப்பினா்‌ பி.ஆர்‌.ஜி.அருண்குமார், கவுண்டம்பாளையம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ வி.சி.ஆறுக்குட்டி, துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி‌, மண்டல உதவி ஆணையாளர்கள்‌ முருகன்‌ (கிழக்கு), செந்தில்குமார்‌ ரத்தினம்‌ (வடக்கு), மாநகரப் பொறியாளர்‌ ஆர்‌.லட்சுமணன்‌, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, சுகாதார அலுவலர்கள்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனா்‌.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...