கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் ரூ.12 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை புதுப்பிக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் ரூ.12 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை புதுப்பிக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணிதுவக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் சிறப்பு சாலைகள் திட்டத்தின்கீழ் வார்டு எண்.32 மற்றும் 37-க்குட்பட்ட பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கொடிசியா சாலை, அவினாசி சாலை முதல் எஸ்.பெண்ட் வரை மற்றும் குமுதம் நகர் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலையை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.

விளாங்குறிச்சி சாலை மகேஷ்வரி நகர் முதல் மாநகராட்சி எல்லை வரை மற்றும் சேரன் மாநகர் பிரதான சாலையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை புதுப்பிக்கும் பணி, வார்டு எண்.32 சேரன் மாநகரில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டில் மலா அவென்யூ மற்றும் சக்தி நகரில் தார்ச்சாலை புதுப்பிக்கும் பணி போன்ற பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. மொத்தம் ரூ.12 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டிலான இந்த தார்ச்சாலை புதுப்பிக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், வடக்கு சட்டமன்ற உறுப்பினா் பி.ஆர்.ஜி.அருண்குமார், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி, துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி, மண்டல உதவி ஆணையாளர்கள் முருகன் (கிழக்கு), செந்தில்குமார் ரத்தினம் (வடக்கு), மாநகரப் பொறியாளர் ஆர்.லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.