கோவை: கோவையில், போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க 171 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து உதவி ஆணையர் தெரிவித்தார்.

கோவை மாநகரில் 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா கோவில் சந்திப்பு பகுதியில் கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ராஜ்கண்ணா கூறியதாவது:- விழிப்புணர்வின் ஒரு பகுதியாக வீதி நாடகம் நடத்தப்பட்டது. சித்திரகுப்தன், எமதர்மன் இடையே உரையாடல் குறித்த வீதி நாடகம் நடத்தப்பட்டது. இதில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவதன் அவசியம், சிக்னல்களை மதிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தானியங்கி முறையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிப்பது பரீட்சார்த்த முறையில் நடந்து வருகிறது. பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைபிடித்து விபத்துக்களை குறைக்க உதவ வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் விபத்து குறைந்து வருகிறது. போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க கோவையில் 171 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.