இஸ்லாமியர்களை இழிவுபடுத்திப் பேசிய இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐக்கிய ஜமாத் அமைப்பினர் மனு!

கோவை: இஸ்லாமியர்களையும், இஸ்லாமியப் பெண்களின் இழிவுபடுத்திப் பேசிய இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் ஐக்கிய ஜமாத் அமைப்பினர் மனு அளித்தனர்.



கோவை: இஸ்லாமியர்களையும், இஸ்லாமியப் பெண்களின் இழிவுபடுத்திப் பேசிய இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெய்ஷன்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் ஐக்கிய ஜமாத் அமைப்பினர் மனு அளித்தனர்.

இது குறித்து ஐக்கிய ஜமாத் அமைப்பினர் பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:-



கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி கோவை மாவட்ட செயலாளர் ஜெய்ஷன்கர் என்பவர் முகமது நபி அவர்களையும் இஸ்லாமியர்களையும், இஸ்லாமியப் பெண்களையும் மிக ஆபாசமான வகையில் பேசியுள்ளார்.

மேலும், இவரின் இந்தப் பேச்சுக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல், இரு சமூகங்களுக்கு இடையே மோதல் போக்கினை ஏற்படுத்தும் இதுபோன்ற பேச்சுக்களை பல பகுதிகளில் பேசியுள்ளதால் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், தற்போது சிங்காநல்லூரில் இதுபோன்று பேசியதால் இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் அமைப்பு சார்பில் இன்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமாரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நேரங்களில் இவரை பொதுக்கூட்ட மேடையில் பேச அனுமதித்தால் அமைதியான தேர்தல் நடைபெற தடையாக இருக்கும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...