கோவை: இஸ்லாமியர்களையும், இஸ்லாமியப் பெண்களின் இழிவுபடுத்திப் பேசிய இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் ஐக்கிய ஜமாத் அமைப்பினர் மனு அளித்தனர்.
கோவை: இஸ்லாமியர்களையும், இஸ்லாமியப் பெண்களின் இழிவுபடுத்திப் பேசிய இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெய்ஷன்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் ஐக்கிய ஜமாத் அமைப்பினர் மனு அளித்தனர்.
இது குறித்து ஐக்கிய ஜமாத் அமைப்பினர் பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:-
கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி கோவை மாவட்ட செயலாளர் ஜெய்ஷன்கர் என்பவர் முகமது நபி அவர்களையும் இஸ்லாமியர்களையும், இஸ்லாமியப் பெண்களையும் மிக ஆபாசமான வகையில் பேசியுள்ளார்.
மேலும், இவரின் இந்தப் பேச்சுக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல், இரு சமூகங்களுக்கு இடையே மோதல் போக்கினை ஏற்படுத்தும் இதுபோன்ற பேச்சுக்களை பல பகுதிகளில் பேசியுள்ளதால் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், தற்போது சிங்காநல்லூரில் இதுபோன்று பேசியதால் இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் அமைப்பு சார்பில் இன்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமாரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நேரங்களில் இவரை பொதுக்கூட்ட மேடையில் பேச அனுமதித்தால் அமைதியான தேர்தல் நடைபெற தடையாக இருக்கும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.