கோவை: பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாலம்மன்துறையில் அனிதா என்பவருக்குச் சொந்தமான தனியார் தென்னை நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்நிலையில், வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென ஒரு பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து, தொழிலாளர்கள் பொள்ளாச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால், தீயணைப்புத்துறையினர் பொள்ளாச்சியில் இருந்து வருவதற்குள் பெரும்பாலான தென்னை நார்கள் எரிந்து நாசமாயின.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தென்னை நார் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பொள்ளாச்சி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட தனியார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது. ஆனால், பொள்ளாச்சியில் தீயணைப்பு நிலையம் ஒன்று மட்டுமே உள்ளதால் இப்பகுதியில் தென்னை நார் உரிமையாளர்கள் ஆனைமலையில் தீயணைப்பு நிலையம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.