பொள்ளாச்சி அருகே தண்ணீர் பிடிக்க சென்ற வடமாநில தொழிலாளி விஷப்பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை: பொள்ளாச்சி அருகே கோவில் பாளையத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற போது, விஷப்பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே கோவில் பாளையத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற போது, விஷப்பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழிற்சாலையின் பின்பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சஞ்சய் குமார் என்பவர் இரவு நேரத்தில் அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். அங்கு திடீரென வந்த விஷப் பாம்பு ஒன்று சஞ்சய்குமார் கடித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சஞ்சய்குமார் அங்கிருந்த திப்பு என்ற நண்பரிடம் தகவல் கொடுத்ததையடுத்து, அங்கிருந்தவர்கள் சஞ்சய்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சஞ்சய் குமார் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சந்தான லால் என்பவர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் இன்று கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...