குவாரி பவுடர்கள் எம் சாண்ட் என்ற பெயரில் விற்பனை: நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் கோரிக்கை!

கோவை: குவாரி பவுடர்கள் எம் சாண்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: குவாரி பவுடர்கள் எம் சாண்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் கே.சி.பி. சந்திர பிரகாஷ் ஆகியோர் தமிழக பொதுப்பணித்துறை நிர்வாகம், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவையில் கட்டடங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான போலியான, தரமற்ற எம் சாண்ட் விற்பனை அதிகமாகி வருகிறது. கிரசர் பவுடரில் எம் சாண்ட் கலப்பது பரவலாகிவிட்டது. இரண்டு யூனிட் எம் சாண்ட், இரண்டு யூனிட் குவாரி டஸ்ட் பவுடர் கலந்து எம்.சாண்ட் என விற்பனை செய்கிறார்கள்.

எம் சாண்ட் என வெளித்தோற்றத்துக்கு காட்டும்வகையில் தண்ணீர் கலப்பதும் நடக்கிறது. ஜா மற்றும் கோன் கிரசரில் தயாரிக்கப்படும் தரமற்ற எம் சாண்டை வி.எஸ்.ஐ. இயந்திரத்தில் தயாரிக்கப்படும் தரமான எம்.சாண்ட் போல் காட்டுகிறார்கள்.‌ மசனை மற்றும் கிராவல் மண்ணை அரைத்து அதை எம் சாண்ட் வாசரில் கழுவி வெள்ளை எம்.சாண்ட் என விற்பனை செய்கிறார்கள். இந்த வகையான எம்.சாண்ட் பயன்படுத்துவது கட்டடங்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.‌

பொதுப்பணித்துறையின் தரப்பரிசோதனை சான்று, வி.எஸ்.ஐ அப்ரூவல் சான்று பெற்று தரமாக தயாரிக்கப்படும் எம் சாண்ட் மட்டுமே கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். இதர போலியான எம் சாண்ட் உற்பத்தி செய்து விற்பனை செய்பவர்கள் மீது பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலி எம் சாண்ட்டை பறிமுதல் செய்து அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்களை ஏமாற்றி குவாரி பவுடர்களை எம் சாண்ட் தோற்றத்தில் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும்.‌ போலி எம் சாண்ட் ஆதிக்கம் அதிகமானால் பல லட்ச ரூபாய் செலவு செய்து கடன் வாங்கி வீடு கட்டும் பொது மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.‌

போலி எம் சாண்ட் மூலம் கட்டப்பட்ட கட்டிடங்கள் சில மாதங்களில் விரிசல் விட்டு பழுதாகிவிடும். போலியான எம் சாண்ட் மற்றும் பி சாண்ட் தயாரிக்கும் கிரஷர் மற்றும் குவாரி யூனிட்டுகள் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும். தரமற்ற, ஆபத்தான எம் சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...