கோவை: குவாரி பவுடர்கள் எம் சாண்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் கே.சி.பி. சந்திர பிரகாஷ் ஆகியோர் தமிழக பொதுப்பணித்துறை நிர்வாகம், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவையில் கட்டடங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான போலியான, தரமற்ற எம் சாண்ட் விற்பனை அதிகமாகி வருகிறது. கிரசர் பவுடரில் எம் சாண்ட் கலப்பது பரவலாகிவிட்டது. இரண்டு யூனிட் எம் சாண்ட், இரண்டு யூனிட் குவாரி டஸ்ட் பவுடர் கலந்து எம்.சாண்ட் என விற்பனை செய்கிறார்கள்.
எம் சாண்ட் என வெளித்தோற்றத்துக்கு காட்டும்வகையில் தண்ணீர் கலப்பதும் நடக்கிறது. ஜா மற்றும் கோன் கிரசரில் தயாரிக்கப்படும் தரமற்ற எம் சாண்டை வி.எஸ்.ஐ. இயந்திரத்தில் தயாரிக்கப்படும் தரமான எம்.சாண்ட் போல் காட்டுகிறார்கள். மசனை மற்றும் கிராவல் மண்ணை அரைத்து அதை எம் சாண்ட் வாசரில் கழுவி வெள்ளை எம்.சாண்ட் என விற்பனை செய்கிறார்கள். இந்த வகையான எம்.சாண்ட் பயன்படுத்துவது கட்டடங்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.
பொதுப்பணித்துறையின் தரப்பரிசோதனை சான்று, வி.எஸ்.ஐ அப்ரூவல் சான்று பெற்று தரமாக தயாரிக்கப்படும் எம் சாண்ட் மட்டுமே கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். இதர போலியான எம் சாண்ட் உற்பத்தி செய்து விற்பனை செய்பவர்கள் மீது பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி எம் சாண்ட்டை பறிமுதல் செய்து அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்களை ஏமாற்றி குவாரி பவுடர்களை எம் சாண்ட் தோற்றத்தில் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும். போலி எம் சாண்ட் ஆதிக்கம் அதிகமானால் பல லட்ச ரூபாய் செலவு செய்து கடன் வாங்கி வீடு கட்டும் பொது மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
போலி எம் சாண்ட் மூலம் கட்டப்பட்ட கட்டிடங்கள் சில மாதங்களில் விரிசல் விட்டு பழுதாகிவிடும். போலியான எம் சாண்ட் மற்றும் பி சாண்ட் தயாரிக்கும் கிரஷர் மற்றும் குவாரி யூனிட்டுகள் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும். தரமற்ற, ஆபத்தான எம் சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.