கோவையில் திமுகவின் மக்கள் கிராம சபையில் பெண்ணை தாக்கிய விவகாரம்: 4 பேர் இன்று கோவைகோர்ட்டில் ஆஜர்..!

கோவை: கோவையில் திமுகவின் மக்கள் கிராம சபையில் பெண்ணை தாக்கிய விவகாரம்: 4 பேர் இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்..!



கோவை: கோவையில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில் பெண்ணை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட 4 பேர் இன்று கோர்ட்டில் ஆஜராகினர்.

கடந்த மாதத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் சபை கூட்டம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்தினார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்தில், பூங்கொடி என்ற அதிமுகவை சேர்ந்த பெண் கேள்வி எழுப்புவது போல், சலசலப்பை ஏற்ப்படுத்தியதாக கூறி அவர் அப்புறப்படுத்தப்பட்டார். 

இதையடுத்து, பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் திமுகவை சேர்ந்த ராஜேந்திரன், சாமிபையன், ரங்கசாமி, ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவினர் 4 பேரும் மனுதாக்கல் செய்து இருந்த நிலையில், கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்து ஜாமீன் பெற உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி இருந்தது. 

இதையடுத்து, திமுகவை சேர்ந்த ராஜேந்திரன், சாமிபையன், ரங்கசாமி, ராஜா ஆகியோர் இன்று கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை இன்று மாலை நான்கு மணிக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...