கோவை, திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் - பொதுமக்கள் தி.மு.க.வில் இணைந்தனர்!

கோவை: கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


கோவை: கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதியைச் சந்தித்து அவர் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

இதையடுத்து நடைபெற்ற விழாவில் பேசிய சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-



பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் நம் மக்களையும், நம் மக்களின் வாழ்வாதாரத்தையும் எவ்வாறு முன்னேற்றினார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்களால்தான் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது.

நம் நாட்டை மோடி தலைமையிலான மத்திய அரசும், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுத்து தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்துக்கொண்டுள்ளனர். இந்த அராஜகங்களுக்கெல்லாம் முடிவு கட்ட வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைய அயராது உழைப்போம். தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, அதையே வழிமொழியும் விதமாகத் திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் தங்களை இணைத்துக்கொண்ட உடன்பிறப்புகள் அனைவரும் பணியாற்றிடவும், வரும் தேர்தலில் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்திடவும் உறுதியேற்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...