கோவை: கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இதையடுத்து முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடக்கிறது. இடம் சுத்தம் செய்யும் பணி நேற்று முதல் துவங்கியது.

கோவை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மதுக்கரை, நீலாம்பூர் பைபாஸ் ரோடு, கஞ்சிக் கொணாம்பாளையம் பிரிவிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் நான்காம் முறையாக இந்த ஆண்டும் வரும் 21-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மூன்று முறை நடந்த அதே இடத்தில் இவ்வாண்டும் போட்டியை நடத்த பூமியை சுத்தப்படுத்தும் பணியை நேற்று வழிபாட்டுடன் துவங்கியது. காலரி, வாடிவாசல் அமைத்தல் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படவுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் ஜல்லிக்கட்டு நிர்வாகத்தினர் கை கோர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.