வெலிங்டன் தேவாலயத்தில் பல்வேறு போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி!

நீலகிரி: பல்வேறு போர்களில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வெலிங்டனில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயத்தில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


நீலகிரி: பல்வேறு போர்களில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வெலிங்டனில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயத்தில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவு தின பிரார்த்தனை கூட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு பிரார்த்தனை கூட்டம் தேசிய தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டம் ராணுவ வீரர்கள் தங்களது வாழ்க்கையை நாட்டிற்கு அர்ப்பணித்ததை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகிறது.



இந்த நிகழ்ச்சியில் வெலிங்டன் ராணுவ மைய கமாடண்ட் ராஜேஷ்வர் சிங் கலந்துகொண்டு பாரம்பரிய முறைப்படி போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 135 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்தில் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு வீரமரணமடைந்த தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தி பிரார்த்தனையை மேற்கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...