இன்று விடுதலையாகிறார் சசிகலா.! தனியார் மருத்துவமனைக்கு மாற்றமா?
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு, பின் இன்று சசிகலா விடுதலையாக உள்ளார்.
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் சசிகலா இன்று காலை விடுதலையாக உள்ள நிலையில்,தீவிர சிகிச்சையில் அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதுள்ளது எனவும் கொரோனா தொற்றும் குறைந்து விட்டது, இதனால், சிறையில் இருந்து அவரை விடுதலை செய்வதில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதை சிறைத்துறை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
அதன்படி, இன்று காலை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில், அவரை விடுதலை செய்வதற்கான வேலைகளை சிறை அதிகாரிகள் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார், 10.30 மணிக்கு அவர் விடுதலையாகி விடலாம் என்று கூறப்படுகிறது.அவர் மருத்துவமனையில் இருந்து செல்லாவிட்டாலும், மாலை 6 மணியுடன் சிறை கைதிக்கான அனைத்து நடைமுறைகளும் திரும்பப் பெறப்படும்.
விருப்பம் இருந்தால், அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளலாம், இல்லையென்றால் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளலாம்.
மேலும், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்தி கொள்ளும் விதிமுறையை கடைபிடிக்க வேண்டியுள்ளது. இதனால் தொண்டர்களும், உறவினர்களும் அவரை நேரில் சென்று பார்க்க முடியாது, என்று கூறப்படுகிறது.