இன்று விடுதலையாகிறார் சசிகலா.! தனியார் மருத்துவமனைக்கு மாற்றமா?

இன்று விடுதலையாகிறார் சசிகலா.! தனியார் மருத்துவமனைக்கு மாற்றமா?

 பெங்களூரு: 

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு, பின் இன்று சசிகலா விடுதலையாக உள்ளார். 

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் சசிகலா இன்று காலை விடுதலையாக உள்ள நிலையில்,தீவிர சிகிச்சையில் அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதுள்ளது எனவும் கொரோனா தொற்றும் குறைந்து விட்டது, இதனால், சிறையில் இருந்து அவரை விடுதலை செய்வதில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதை சிறைத்துறை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

அதன்படி, இன்று காலை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில், அவரை விடுதலை செய்வதற்கான வேலைகளை சிறை அதிகாரிகள் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார், 10.30 மணிக்கு அவர் விடுதலையாகி விடலாம் என்று கூறப்படுகிறது.அவர் மருத்துவமனையில் இருந்து செல்லாவிட்டாலும், மாலை 6 மணியுடன் சிறை கைதிக்கான அனைத்து நடைமுறைகளும் திரும்பப் பெறப்படும். 

விருப்பம் இருந்தால், அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளலாம், இல்லையென்றால் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளலாம். 

மேலும், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்தி கொள்ளும் விதிமுறையை கடைபிடிக்க வேண்டியுள்ளது. இதனால் தொண்டர்களும், உறவினர்களும் அவரை நேரில் சென்று பார்க்க முடியாது, என்று கூறப்படுகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...