கோவையில் 72-வது குடியரசு தின விழா: 1,500 போலீசார் பாதுகாப்பு; சோதனைப் பணிகள் தீவிரம்
கோவை: நாளை இந்தியா முழுவதும் 72 -வது குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, கோவை மாநகர் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விழாவை முன்னிட்டு, கோவை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியான காந்திபுரம் டவுன், பஸ் ஸ்டாண்டு, திருவள்ளுவர் பேருந்து நிலையம், கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, உக்கடம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, காந்தி பார்க் பகுதி ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ரயில்நிலையத்தில் இருந்து வரக்கூடிய பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுப்பப்படுகின்றன. அதேபோல, சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில், நாளை கோவை மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அவர்கள் தலைமையில் கோவை வ.உ.சி மைதானத்தில் காலை 8 மணி அளவில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. ஆட்சியர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கோவை காவல் துறையில் உள்ள மோப்ப நாய்களின் சாகசங்கள், நடைபெறவுள்ளது.
தியாகிகள், முதியோர், சமூக சேவையாளர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி குடியரசு தின விழா உரையாற்றுவார். மேலும், கடந்த ஆண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கவுள்ளார்.
குறிப்பாக, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட 1,400 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கவுள்ளார்.
நாளை குடியரசு விழாவிற்கு வரக்கூடிய பொதுமக்கள், மாணவிகள், அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சானிடைசர் பயன்படுத்திய பிறகே, உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க வேண்டும், என பல்வேறு விதமான அரசு சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.