கோவையில் 72-வது குடியரசு தின விழா: 1,500 போலீசார் பாதுகாப்பு; இரயில் நிலையத்தில் சோதனைப் பணிகள் தீவிரம்

கோவையில் 72-வது குடியரசு தின விழா: 1,500 போலீசார் பாதுகாப்பு; சோதனைப் பணிகள் தீவிரம்


கோவை: நாளை இந்தியா முழுவதும் 72 -வது குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, கோவை மாநகர் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

விழாவை முன்னிட்டு, கோவை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியான காந்திபுரம் டவுன், பஸ் ஸ்டாண்டு, திருவள்ளுவர் பேருந்து நிலையம், கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, உக்கடம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, காந்தி பார்க் பகுதி ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 



குறிப்பாக, ரயில்நிலையத்தில் இருந்து வரக்கூடிய பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுப்பப்படுகின்றன. அதேபோல, சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. 



இந்தநிலையில், நாளை கோவை மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அவர்கள் தலைமையில் கோவை வ.உ.சி மைதானத்தில் காலை 8 மணி அளவில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. ஆட்சியர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். 

அதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கோவை காவல் துறையில் உள்ள மோப்ப நாய்களின் சாகசங்கள், நடைபெறவுள்ளது. 

தியாகிகள், முதியோர், சமூக சேவையாளர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி குடியரசு தின விழா உரையாற்றுவார். மேலும், கடந்த ஆண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கவுள்ளார்.

குறிப்பாக, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட 1,400 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கவுள்ளார்.

நாளை குடியரசு விழாவிற்கு வரக்கூடிய பொதுமக்கள், மாணவிகள், அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சானிடைசர் பயன்படுத்திய பிறகே, உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க வேண்டும், என பல்வேறு விதமான அரசு சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...