கோவை: இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் உலகமெங்கும் மதப்பிரச்சாரம் செய்து வரும் பால் தினகரனின் அலுவலகங்களில், இன்று 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவருடைய அலுவலகங்களுக்கு பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று நேற்று, அதிகாலையிலிருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவருடைய, குழுமத்துக்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுந்ததை அடுத்து பால் தினகரனுக்கு சொந்தமான
தமிழகத்தில் 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில் பகுதியில் உள்ள பால் தினகரனுக்கு சொந்தமான காருண்யா பல்கலைகழகத்தின் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை காரில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நேற்று, முதல் நாள் சோதனை முடிந்த நிலையில் இன்று 2-வது நாளாக தங்களுடைய சோதனைகளை தொடங்கினர்.
இன்று மாலை வரை நீடித்த சோதனையில் கணினி தகவல்கள், வங்கி ஸ்டேட்மென்ட் உட்பட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.