வால்பாறையில் கொரோனா தடுப்பூசி அச்சம்: மருத்துவர்கள் போட்டுக்கொண்டதால் மக்கள் நம்பிக்கை..!

வால்பாறையில் கொரோனா தடுப்பூசி அச்சம்: மருத்துவர்கள் போட்டுக்கொண்டதால் மக்கள் நம்பிக்கை..!


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூவர் மற்றும் ஒரு பணியாளரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால், மற்ற பணியாளர்களின்மத்தியில் அச்சம் குறைந்துள்ளது, என்று கூறப்படுகிறது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழக சுகாதாரத் துறையின் உத்தரவின்படி சுகாதார நிலைய பணியாளர்கள் அனைவருக்கும் முதற்கட்டமாக இன்று மாலை மூன்று மணிமுதல் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், வால்பாறை, முடீஸ், சோலையார் டேம் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்கள் உட்பட சுமார் 200 க்கும் மேற்பட்ட பணியாளர்களில் விருப்பமுள்ள பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதற்கான, விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்த நிலையில், தடுப்பூசி குறித்த அச்சம் காரணமாக பலரும்முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து, மருத்துவர்கள் கூறுகையில்,பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்புடன் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்திருந்தனர். 

இருப்பினும், தடுப்பூசி போடப்படும் சுகாதார நிலைய இருக்கைகள் உட்பட மருத்துவமனையே வெறுச்சோடி காணப்பட்டது. 

இந்நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தி, மருத்துவர்கள் நிதீஷ், மணிகண்டன் மற்றும் பணியாளர் பாலமுருகன் ஆகியோர் எந்தவித அச்சமுமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

இதனால், பணியாளர்களிடையே ஏற்ப்பட்டிருந்த அச்சம் குறைந்து, பலரும் தடுப்பூசி போட முன்வருவர் என்று நம்பப்படுகிறது.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...