வால்பாறையில் கொரோனா தடுப்பூசி அச்சம்: மருத்துவர்கள் போட்டுக்கொண்டதால் மக்கள் நம்பிக்கை..!
கோவை: வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூவர் மற்றும் ஒரு பணியாளரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால், மற்ற பணியாளர்களின்மத்தியில் அச்சம் குறைந்துள்ளது, என்று கூறப்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழக சுகாதாரத் துறையின் உத்தரவின்படி சுகாதார நிலைய பணியாளர்கள் அனைவருக்கும் முதற்கட்டமாக இன்று மாலை மூன்று மணிமுதல் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், வால்பாறை, முடீஸ், சோலையார் டேம் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்கள் உட்பட சுமார் 200 க்கும் மேற்பட்ட பணியாளர்களில் விருப்பமுள்ள பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கான, விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்த நிலையில், தடுப்பூசி குறித்த அச்சம் காரணமாக பலரும்முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து, மருத்துவர்கள் கூறுகையில்,பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்புடன் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், தடுப்பூசி போடப்படும் சுகாதார நிலைய இருக்கைகள் உட்பட மருத்துவமனையே வெறுச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தி, மருத்துவர்கள் நிதீஷ், மணிகண்டன் மற்றும் பணியாளர் பாலமுருகன் ஆகியோர் எந்தவித அச்சமுமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இதனால், பணியாளர்களிடையே ஏற்ப்பட்டிருந்த அச்சம் குறைந்து, பலரும் தடுப்பூசி போட முன்வருவர் என்று நம்பப்படுகிறது.