கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் முதல்வர் தேர்தல் பிரச்சாரம்..!

கோவை: கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்கள் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.



கோவை: கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அவருடைய சுற்றுப்பயண விபரம் வருமாறு:

23ஆம் தேதி: கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட ராஜ ராஜ வீதியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை காலை 8 மணிக்கு துவங்குகிறார். அதைத் தொடர்ந்து, செல்வபுரம், குனியமுத்தூர், கரும்புக்கடை, சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் கிணத்துக்கடவு ,கோவில் பாளையம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

பின்னர், பிற்பகல் 3 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், ஆனைமலை, மாசாணியம்மன் கோவில், சுல்தான்பேட்டை வழியாக சூலூர் செல்கிறார். அதே நாள், இரவு 8 மணிக்கு கோவை கொடிசியா வளாகத்தில் கோவை தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்.

முதல் நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்குகிறார்.

24ஆம் தேதி: காலை 8 மணிக்கு கோவை புலியகுளம் பகுதியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்துு, சிங்காநல்லூர், பீளமேடு புதூர், காளப்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம், காரமடை ரங்கநாதர் கோயில் ஆகிய இடங்களில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, பின்னர் மதியம் மூன்று மணிக்கு பெரியநாயக்கன் பாளையம், துடியலூர், சாய்பாபா காலனி, வடவள்ளி, தொண்டாமுத்தூர், கோனியம்மன் கோவில் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

பின்னர், 9 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அன்றிரவு கோவையில் தங்குகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....