கோவை உக்கடம் லாரி பேட்டையில், ரு 1 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்; இருவர் கைது

கோவை: கோவை உக்கடம் லாரி பேட்டையில், ரு 1 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவை உக்கடம் லாரி பேட்டையில், ரு 1 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்துக்கு கர்நாடக மற்றும் பிற மாநிலங்களிலிருந்து அதிகளவிலான தடை செய்யப்பட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு, கல்லூரி மாணவர்கள் மற்றும் வட இந்தியர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.



இந்நிலையில், கோவை உக்கடம் லாரி பேட்டையில் போதைப்பொருட்கள் கர்நாடகவில் இருந்து சரக்கு வாகனங்களில், கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மாநகர துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.



சோதனையில், சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான 24 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக, அப்பாஸ்(38) மற்றும் ஜெய்னுல்லா அபுதீன்(56) ஆகிய இருவரை கைது செய்த உக்கடம் போலீசார், இருவர் மீதும் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (விளம்பரம் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, விநியோகம், விற்பனை தடை) சட்டம் COTPA-வின் கீழ் 7(1)r/w 20(1) வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...