வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமை: கோவை ஸ்டீல் வியாபாரி குடும்பம் மீது புகார்!

கோவை: திருமணமாகி 4 வருடமே ஆன பெண்ணிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கோவையைச் சேர்ந்த ஸ்டீல் வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: திருமணமாகி 4 வருடமே ஆன பெண்ணிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கோவையைச் சேர்ந்த ஸ்டீல் வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை காளப்பட்டி நேரு வீதி திருமுருகன் நகர் பகுதியில் வசிப்பவர் சுகன்யா ஜாஸ்மின் (வயது 32). எம்.ஃபில் படித்துள்ளார். கோவை கணபதி சி.எம்.எஸ். ஸ்கூல் பின்புறம் வசிப்பார் சார்லஸ் ஆபிரகாம் (வயது 36). ஐ.டி. ஊழியர். இவர்கள் இருவருக்கும் கடந்த 26.5.2016 அன்று பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது. சுகன்யா ஜாஸ்மின் கணபதியில் உள்ள தனது கணவர் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கணவர் சார்லஸ் ஆபிரகாம் ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருமணத்தின் போது மணமகன் வீட்டார் 175 பவுன் நகையும், 25 லட்சம் ரொக்கமும் கேட்டுள்ளனர். திருமணத்தின்போது மணப்பெண் வீட்டில் 100 பவுன் நகையும் 20 லட்சம் ரொக்கமும் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் மேலும் பணம் கேட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமை செய்து வந்தனர். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுகன்யா ஜாஸ்மின் கொடுமை தாங்க முடியாமல் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் போன் மூலமாக தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு வரதட்சணை கேட்டு டார்ச்சல் செய்ததால் அவர் அனைத்து மகளிர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்ததில் சுகன்யா ஜாஸ்மினின் கணவர் சார்லஸ் ஆபிரகாம், மாமனார் கிறிஸ்டோபர், மாமியார் டோரதி, கொழுந்தனார் ஆசீர் ஆகியோர்மீது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொழுந்தனார் ஆசீர் தனது அண்ணி சுகன்யா ஜாஸ்மினின் புகைப்படத்தை அவரது செல் நம்பர் அருகே வாட்ஸ்அப் புரொபைலில் பதிவு செய்து அழைப்புகளை தனது செல்லில் பதிந்து வைத்துள்ளதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆதலால் அனைத்து மகளிர் காவல் நிலைய கிழக்கு இன்ஸ்பெக்டர் அமுதா தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....