பன்றி வேட்டைக்குச் சென்றபோது நாட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி!

கோவை: கோவை அருகே உள்ள கிராமப்புற மலைப்பகுதியில் பன்றி வேட்டைக்குச் சென்றபோது சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்து வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை அருகே உள்ள கிராமப்புற மலைப்பகுதியில் பன்றி வேட்டைக்குச் சென்றபோது சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்து வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை அருகே உள்ள தீத்திபாளையம், மாதேஷ் கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 40). இவர் வனப்பகுதி கிராமப் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று இரவு இவரது நண்பர்கள் பாபு, ஆனந்த், ரங்கநாதன், ராமசாமி ஆகியோருடன் சட்டவிரோதமாக லைசென்ஸ் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஐயா சாமி மலை வனப்பகுதிக்குள் சென்றனர். அந்தப் பகுதியில் அவர்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடச் சென்றதாக தெரிகிறது.

அப்போது அவர்களில் ஒருவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி திடீரென காட்டுப் பகுதியில் உள்ள மரக்கிளையில் உராய்ந்து வெடித்தது. இதில் அய்யாசாமி மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் மலை கிராம மக்கள் வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி நண்பர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு துப்பாக்கி லைசென்ஸ் இல்லாமல் வைத்திருந்தது குறித்தும் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....