கோவை: 10 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 96 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. இதனடிப்படையில், பள்ளிகளை திறக்க அரசு அனுமதித்தது. இதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 96 தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. காலை முதலே மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வர தொடங்கி உள்ளனர்.

பள்ளி நுழைவாயில் முன் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க விதமாக நிறுத்தி வைக்கப்பட்டு, தெர்மோமீட்டர் மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புதல் கடிதத்தை பெற்றுக்கொண்டு, பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் அனுமதித்திக்கபட்டனர்.
வகுப்பறைகளில் சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதல் இரண்டு நாட்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும், அதன் பிறகு வழக்கம்போல் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.