கோவையில் ரூ.2 கோடியில் தார்‌ச்சாலை அமைக்கும்‌ பணிக்கான பூமி பூஜை: அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்!

கோவை: கோவையில் ரூ.2 கோடியில் தார்‌ச்சாலை அமைக்கும்‌ பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். தியாகராஜா நகரில்‌ ரூ.8 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடத்தையும்‌, கல்கி கார்டன்‌ பகுதியில்‌ ரூ.64.90 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ இறகுப் பந்து உள்விளையாட்டரங்கத்தையும்‌ பொதுமக்களின்‌ பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.


கோவை: கோவையில் ரூ.2 கோடியில் தார்‌ச்சாலை அமைக்கும்‌ பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.



தியாகராஜா நகரில்‌ ரூ.8 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடத்தையும்‌, கல்கி கார்டன்‌ பகுதியில்‌ ரூ.64.90 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ இறகுப் பந்து உள்விளையாட்டரங்கத்தையும்‌ பொதுமக்களின்‌ பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ ரூ.2 கோடியே 54 லட்சத்து 85 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணி, காசிநாத்‌ கார்டன்‌ பகுதியில்‌ ரூ.22.60 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ விளையாட்டு வளாகம்‌ மற்றும்‌ உடற்பயிற்சிக்கூடம்‌ அமைக்கும்‌ பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி ‌பூமி பூஜை செய்து பணிகளையும் தொடங்கிவைத்தார்.



தியாகராஜாநகரில்‌ ரூ.8 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடம் மற்றும் கல்கி கார்டன்‌ பகுதியில்‌ ரூ.64.90 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ இறகுப்பந்து உள்விளையாட்டரங்கத்தை‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ டர்ஃப் (Turf) திட்டத்தின்கீழ்‌ வார்டு எண்‌ 90-க்கு உட்பட்ட ஹவுசிங்யூனிட்‌ டபிள்யூ.பிளாக்‌ பகுதியில் ரூ.17 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, சாந்தி ஆசிரமம்‌ சாலை மற்றும்‌ ஹவுசிங்யூனிட்‌ ஆர்‌.பிளாக்‌ பகுதிகளில்‌ ரூ.38.10 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, லட்சுமி நகர்‌ பகுதியில்‌ ரூ.12 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, மீனாட்சி நகா்‌ பகுதியில்‌ ரூ.12.50 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, வார்டு எண்‌ 89-க்கு உட்பட்ட அம்மா நகர்‌ பகுதியில்‌ ரூ.7.50 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, மருதம்‌ நகர்‌ மற்றும்‌ சமீம்‌ கார்டன்‌ பகுதிகளில்‌ ரூ.48.85 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, மருத்துவமனை சாலை மற்றும்‌ அண்ணாநகர் சாலை ஆகிய பகுதிகளில்‌ ரூ.12.70 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, வார்டு எண்‌ 91-க்கு உட்பட்ட ஓம்சக்தி நகர்‌, காமாட்சி பெட் (bet) பகுதியில்‌ ரூ.19.30 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, ஜெ.ஆர்.டி.கார்டன்‌ மற்றும்‌ விஷால்‌ எஸ்டேட்‌ பகுதியில்‌ ரூ.7.70 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, கோகுலம்‌ காலனி பகுதியில்‌ ரூ.36.50 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, குளத்துப்பாளையம்‌ பிரதான சாலையில்‌ 14.80 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, வசந்தம்‌ ஹெச்.எஸ்.டி (HST), கல்கி கார்டன்‌ ஆகிய பகுதிகளில்‌ ரூ.27.90 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌ தார்ச்சாலைகள்‌ அமைக்கும்‌ பணிகளுக்கான பூமி பூஜையையும்‌ ஆகமொத்தம்‌ ரூ.2 கோடியே 54 லட்சத்து 85 ஆயிரம்‌ மதிப்பீட்டிலான தார்‌ச்சாலை அமைக்கும்‌ பணிகளுக்கான பூமி பூஜையையும் அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

பின்னர்‌, வார்டு எண்‌ 89-க்குட்பட்ட காசிநாத்‌ கார்டன்‌ பகுதியில்‌ மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.22.60 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ விளையாட்டு வளாகம்‌ மற்றும்‌ உடற்பயிற்சிக்கூடம்‌ அமைக்கும்‌ பணிகளுக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். தியாகராஜா நகரில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடம்‌, வார்டு எண்‌ 91-க்கு உட்பட்ட கல்கி கார்டன்‌ பகுதியில்‌ மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.64.90 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்ட உள்விளையாட்டு அரங்கத்தை‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டுக்காக அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்‌.

இந்நிகழ்ச்சிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌‌, துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி‌, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, தெற்கு மண்டல ஆணையர்‌ தி.ரா.ரவி, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌ மற்றும்‌ உதவிப்‌ பொறியாளர்கள்‌, உதவி செயற்பொறியாளா்கள்‌ மற்றும்‌ மண்டல சுகாதார அலுவலர்‌ லோகநாதன்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனா்‌.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....