கோவை: எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சியில், அ.தி.மு.க. மாணவரணி சார்பில், 127 பானைகளில் பெண்கள் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 104-வது பிறந்தநாள் விழாவை அக்கட்சியினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி 18-வது வார்டில் கோவை தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதில் அப்பகுதியிலுள்ள இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம், பெண்கள் கலந்து கொண்டு சாதி, மத, பேதங்களைக் கடந்து ஒருங்கிணைந்து 127 பானைகளில் சமத்துவப் பொங்கல் வைத்தனர்.

விழாவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
இதற்கானஏற்பாடுகளை கோவை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணிச் செயலாளர் ஜெயம் ராஜா செய்திருந்தார். 127 புதுப்பானையில் பொங்கல் வைத்த பெண்கள், எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்துக்கு படையலிட்டு வணங்கினர்.