கோவை: கோவை அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் எலக்ட்ரீசியன் பிணமாகக் கிடந்தார். இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை செட்டி வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55). இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சசிப்பிரியா என்ற மனைவி இருக்கிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கிருஷ்ணமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருப்பதால் நாளடைவில் அவர் தொடர்ந்து குடிக்கு அடிமையானார். இதனால் குடித்துவிட்டு குடும்பத்தைக் கவனிக்காமல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சசிப்பிரியா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் கணவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் உணர்ந்தனர். உடனடியாக அவரது வீட்டின் கதவை தட்டிப் பார்த்தனர். கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அவரது மனைவி சசிப்பிரியாவுக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த சசிப்பிரியா வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் தனது கணவர் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சசிப் பிரியா செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.