விமர்சனம் நெகட்டிவ்வாக இருந்தாலும் அதை ஏற்க வேண்டும்: திருப்பூர் வந்த மாஸ்டர் பட இயக்குனர் ஓப்பன் டாக்!

திருப்பூர்: விமர்சனம் என்பது பாசிட்டிவ்வாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, நெகட்டிவ்வாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாகப் பேசினார்.


திருப்பூர்: விமர்சனம் என்பது பாசிட்டிவ்வாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, நெகட்டிவ்வாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாகப் பேசினார்.



கொரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான மாஸ்டர் திரைப்படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த பெரும் வரவேற்பு காரணமாக வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்குக்கு வந்த மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கில் நுழைந்து ரசிகர்களிடம் நன்றி தெரிவித்துப் பேசினார்.

இதையடுத்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், `விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனது அடுத்த படத்தில் இந்த விமர்சனங்கள் வராத அளவுக்கு பார்த்துக்கொள்ள முயற்சி செய்வேன். மக்களுக்கு இந்தப் படம் பிடித்திருப்பதால் தான் திரையரங்குக்கு கூட்டமாக வருகின்றனர். விமர்சனம் என்பது பாசிட்டிவ்வாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை நெகட்டிவ்வாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' என்றார். மாஸ்டர் படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க வந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய மல்டிபிளக்ஸ் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்ரமணியம் பேசும்போது, `கொரோனாவுக்குப் பிறகு இந்திய அளவில் வெளியான பெரிய படம் அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் தரமாக இருந்தால் மக்கள் வருவார்கள். அந்தவகையில் மாஸ்டர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஓ.டி.டி தளங்களைவிட மக்கள் திரையரங்குகளில் பார்க்கவே விரும்புகிறார்கள். இனி நிச்சயம் திரையரங்குகளில் அதிக படங்கள் வெளியாகும். மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு நன்றி' என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...