கஞ்சா விற்ற வாலிபர்கள் 2 பேர் கையும்களவுமாக சிக்கினர்!

கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்கள் கையும் களவுமாக சிக்கினார்.


கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்கள் கையும் களவுமாக சிக்கினார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையை அடுத்த கதிர் நாயக்கன் பாளையத்தில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். உடனடியாக அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாரத் (வயது 25) என்பதும், கஞ்சா விற்பதற்காக அவர் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள பாலத்திற்கு கீழே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பதற்காக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பொள்ளாச்சி மாட பட்டியைச் சேர்ந்த கருணாகரன் (வயது 41) என்பதும், கஞ்சா விற்பதற்காக அவர் நின்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் மீது அடி-தடி, கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 500 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 500 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...