குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் ராணுவ தினம் கொண்டாட்டம்!

நீலகிரி: குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் மையம் சார்பில் முகாமில் 73-வது ராணுவ தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.


நீலகிரி: குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் மையம் சார்பில் முகாமில் 73-வது ராணுவ தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி ஆங்கிலேய ராணுவத்தளபதி சர் பிரான்சிஸிடமிருந்து இந்தியாவின் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் எம்.கரியப்பா ராணுவத் தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.



இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாகவும் நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் ஜனவரி 15-ஆம் தேதி இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.



இதையொட்டி நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் (பொறுப்பு)கர்னல் என்.கே.தாஸ் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...