கோவை: கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் ஆண்டவர் கோவில் அருகே இன்று காலை 3 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்றனர். இதில் உஷாரான அப்பகுதி மக்கள் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒருவர் தப்பி ஓடினார். இதையடுத்து மற்ற 2 பேரையும் சோதனை செய்தனர். அவர்களிடம் அரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைய நடத்தியதில் ஒருவர் திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த பேக்கரி ஊழியர் சிவபாலன் என்பதும், மற்றொரு வாலிபர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜசேகர் என்பதும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.