கோவை: புனேவில் இருந்து தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5,56,500 கொரோனா தடுப்பூசி மருந்துகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் மருந்து நிறுவனத்திடமிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தடுப்பூசி மருந்துகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்திற்கு முதல்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்து பாட்டில்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சிறப்பு விமானம் மூலம் இன்று காலை இந்த மருந்துகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன.
அங்கிருந்து 3 வாகனங்கள் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பதப்படுத்தும் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மருந்துகளை, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 10 முகாம்களுக்கு அனுப்பப்பட்டு பின்னர் அவை அந்தந்த முகாம்கள் மூலம் முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளன. இதில் கோவை மாவட்டத்திற்கு 40,600 கொரோனா தடுப்பூசி மருந்து பாட்டில்கள் அனுப்பப்படுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “முதல்கட்டமாக சீரம் நிறுவனத்தின் 5.56 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளும், பாரத் பயோடெக்கின் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பு மருந்துகளும் தமிழகம் வர உள்ளது. ஒருவருக்கு 30 நாள் இடைவெளியில் 2 முறை தடுப்பூசி போடப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும்.
கோவிஷீல்டு, கோவாக்சினை யார் யாருக்கு எந்த தடுப்பூசிகளை போடுவது என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல, தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும்” என்று தெரிவித்தார்.