பொள்ளாச்சி பாலியல் வழக்கின் பின்புலத்தில் முக்கியஸ்தர்கள் இருப்பார்கள், முழுமையான விசாரணை வேண்டும் - மாதர் சங்கத்தினர்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்க முயற்சித்துள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்க முயற்சித்துள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக கோவை காட்டூர் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.



அப்போது பேசிய அவர்கள், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை காலம் கடந்து கைது செய்திருந்தாலும் பாராட்டுக்குரியது என்றனர். ஆளும் கட்சி குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது எனவும், அரசியல் பின்பலம், பணபலம், காவல் துறை ஆதரவு இல்லாமல் இத்தகைய குற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவ்வழக்கின் பின்புலத்தில் முக்கியஸ்தர்கள் இருப்பார்கள் எனவும், இவ்வழக்கில் சிபிஐ முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கூறினர். பொள்ளாச்சி காவல் துறையினர் சாட்சிகளை பாதுகாப்பதற்கு பதிலாக, கலைக்க முயற்சித்தது எனவும், இவ்வழக்கு மெத்தனமாக நடக்க காவல் துறையினர் தான் காரணம் எனவும் குற்றம்சாட்டிய அவர்கள், அதிமுக குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சித்துள்ளது என்று தெரிவித்தனர்.

அதேபோல, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட எஸ்.பி.பாண்டியராஜன் உள்ளிட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி, பொள்ளாச்சியில் வருகின்ற 10 ம் தேதி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

மேலும், பார் நகராஜன், ஆட்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், பகோதிபாளையம் வசந்தகுமார் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் எனவும், இவ்வழக்கில் காவல் துறையினர் விசாரணை செய்து விடுவித்தவர்களிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அரசியல் அழுத்தம் இல்லாமல் சிபிஐ நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற பெண்கள், குழந்தைகள் மீதான குற்றச்சம்பவங்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், பெண்கள் தொடர்பான குற்றச்செயல்கள் தொடர்பாக மாவட்டந்தோறும் குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...