வேலை கிடைக்காத விரக்தி: ஐ.டி பட்டதாரி தீக்குளித்து சாவு!

கோவை: கோவையில் நடந்த இரு வேறு சம்பவங்களில் விஷம் குடித்த பெண் ஒருவரும், உணவு சமைத்தபோது தீயில் கருகிய ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கோவை: கோவையில் நடந்த இரு வேறு சம்பவங்களில் விஷம் குடித்த பெண் ஒருவரும், உணவு சமைத்தபோது தீயில் கருகிய ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை தொண்டாமுத்தூர், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் விஷ்ணு (வயது 25). இவர்ஐ.டி படித்து முடித்துவிட்டு கடந்த ஒரு வருடமாக வேலை தேடி வந்தார். ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் மன வேதனையுடன் இருந்து வந்த விஷ்ணு நேற்று தனது தாத்தா வீட்டிற்குச் சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார்.

கெம்பனூர் பிரிவு அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கியஅவர் சிறிது தூரம் கழித்து திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதும் விஷ்ணு வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...