கோவை: ஆய்வுக் கூட்டத்துக்கு காலதாமதமாக வந்ததால் 7 அரசு தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடத்துக்கு தாமதமாக வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தண்டனை கொடுப்பது வழக்கம். ஆனால் இங்கே ஆய்வுக் கூட்டம் ஒன்றுக்கு தாமதமாக வந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கோவை எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கெம்பநாயக்கன்பாளையம், விளாங்குறிச்சி, காட்டம்பட்டி, காங்கேயம்பாளையம். சூலூர்,பொண்ணா காலனி, செல்லம்பாளையம் ஆகிய 7 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கால தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த 7 தலைமை ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்ட அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.