இலவச பொங்கல் திட்ட பேனர்களை அகற்ற வேண்டும்: தலைமைச் செயலாளரிடம் தி.மு.க மனு!

கோவை: இலவச பொங்கல் பரிசு திட்டம் தொடர்பாக கோர்ட் உத்தரவுகளை மீறி அ.தி.மு.க. கட்சியினர் வைத்துள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்று தலைமைச்செயலாளரிடம் தி.மு.க. புகார் மனு அளித்துள்ளது.



கோவை: இலவச பொங்கல் பரிசு திட்டம் தொடர்பாக கோர்ட் உத்தரவுகளை மீறி அ.தி.மு.க. கட்சியினர் வைத்துள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்று தலைமைச்செயலாளரிடம் தி.மு.க. புகார் மனு அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகளிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கோர்ட்டு நேரடியாக பிறப்பிக்கும் உத்தரவுகளை மறைமுகமாக சென்று சேர்க்கக்கூடாது. கோர்ட்டில் அளிக்கும் உத்தரவுகளை மீறி செயல்படுவது கோர்ட் அவமதிப்பு குற்றமாகும். உத்தரவுகளை எந்த ஒரு மாறுதலும் இல்லாமல் அதிகாரிகள் செயல்படுத்துவது கடமையாகும். சட்டரீதியான இந்த மூன்று அம்சங்களும் இலவச பொங்கல் பரிசு மற்றும் ரூபாய் 2,500 தொகை வழங்கும் திட்டத்தில் தமிழகம் முழுவதும் வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஆளும் கட்சியின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் வழங்குவதுபோல் காட்டுகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சில உத்தரவுகளை ஐகோர்ட் பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. பொங்கல் பரிசு மற்றும் ரூபாய் 2,500 வழங்குவதற்காக அரசு வழங்கும் டோக்கன்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் ஏற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் வழங்குவதை ஏற்கக்கூடாது என கூறப்பட்டது. இது தொடர்பாக அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதில் அரசினால் வழங்கப்படும் டோக்கன்களில் எந்த ஒரு அரசியல் தலைவர்களின் படங்களையும் அச்சிடக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க.வின் மேலிடத்து உத்தரவுப்படி கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளின் அருகிலும், அதையொட்டிய பகுதிகளிலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், உள்ளூர் எம்.எல்.ஏ.க்களின் படம் பொறிக்கப்பட்ட பேனர்களை வைத்துள்ளனர். இது ஐகோர்ட்டின் உத்தரவை அப்பட்டமாக மீறும் செயலாகும். எனவே இதுபோன்ற பேனர்களை உடனடியாக அகற்றவும், பொங்கல் பரிசுத் திட்டத்தில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகள் கடைப்பிடிக்கபடுகிறதா என்பதை உறுதி செய்யவும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...